காதல் வலையில் 13 வயது சிறுமி…நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம்..!
15 வயது சிறுமையை காதலிப்பதாக ஏமாற்றி தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத்தை சேர்ந்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமி அதே பகுதியில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை என அவரது பாட்டி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அந்த சிறுமியை தனியார் விடுதியில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலிப்பதாக மூளைச்சலவை செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
மேலும் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியருடன் சேர்ந்து விடுதியில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





