கொல்கத்தா கொடூரம்..பெண் சீரழிக்கப்படவில்லை..தற்கொலை தான்..!
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வெளியாகியுள்ள பரபரப்பு ஆடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சஞ்சீவ் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கைது செய்யப்பட்டவர், மருத்துவமனையின் முன்னாள் தலைவர் பணியில் இருந்த மருத்துவர்கள் ஊழியர்களுடையோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கும் இடையேயான இரண்டு தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி உள்ளன. அதில் பெண் பயிற்சி மருத்துவர் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனே மருத்துவமனைக்கு வருமாறும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணம் தெரியவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். இரண்டாவது ஆடியோவில் பெண் பயிற்சி மருத்துவர் இறந்து விட்டதாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.





