குஜராத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு..!
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இடைவிடாது மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலம், நீர் நிரம்பி வழிகின்றன. மீட்பு படையினர் மீட்டு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.





