கழிவு நீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டிய பொழுது இடிந்த வீட்டின் சுவர்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டிய பொழுது அருகில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அங்குள்ள என்பிஎஸ் நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இதற்காக அங்கு jcb எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய பொழுது அருகில் இருந்த பிரவீனா என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவர் இருந்தது. இதன் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் சம்பவத்தின் பொழுது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.





