பொன் மாணிக்கவேல் வழக்கில் நாளை தீர்ப்பு..!
EX IG பொன் மாணிக்கவேல் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, பொன் மாணிக்கவேல் குற்றம் செய்ததற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.





