--- --:--:-- --

போலி வாக்காளர் அட்டை அச்சிட்ட கம்ப்யூட்டர் சென்டர்..!

7

பெரம்பலூரில் கம்ப்யூட்டர் சென்டரில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்துக் கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் பொன்னகோடா வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் மங்கள்மேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

 

அதில் எஸ் எஸ் கம்ப்யூட்டர் சென்டரில் பொதுமக்களுக்கு போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்துக் கொடுப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

 

தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து கொடுத்ததாக அபூபக்கர், முகமது சமீம் என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon