AI ஐ பயன்படுத்தி பெண்ணை சீரழித்த சிறுவர்கள்..!
AI தொழில்நுட்பம் மூலம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர் .மத்திய பிரதேச மாநிலம் சத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.
அந்த வீட்டு உரிமையாளரின் மகன் அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் புகைப்படம் எடுத்துள்ளான். மேலும் பெண்ணின் புகைப்படத்தை தொழில்நுட்பம் மூலம் தவறாக சித்தரித்து மிரட்டியுள்ளான்.
இந்த நிலையில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு விடுவேன் என அந்த பெண்ணை சிறுவனும் அவனது நண்பனும் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





