பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் 29 காவலர்கள் காயம்..!
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது.
கொல்கத்தா மற்றும் அதன் அருகிலுள்ள ஹவுராவின் தடுப்புகளை தாண்டி தலைமை செயலகத்தை நோக்கி சென்று போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்பொழுது காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி தண்ணீரை பீச்சியடித்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். சந்திரகாஷ் சந்திரகாசி பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் காவல்துறையை சேர்ந்த 29 பேர் காயமடைந்தனர்.
மேலும் காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.





