68 வயது மூதாட்டிக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!
சென்னையில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்ட நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டிக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டதால் உடனடியாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு பல்வேறு சோதனைகள் மூலம் கருப்பு பூஞ்சை தொற்றின் வீரியம் மற்றும் தொற்று ஏற்பட்டு உள்ள பகுதிகள் உறுதி செய்யப்பட்டன .
இதையடுத்து மாற்றியமைக்கப்பட்ட நவீன சிகிச்சை முறையில் தொழில் நுட்பத்தின் மூலம் பூஞ்சை தொற்று பாதிப்பால் இறந்த செல்களை அகற்றியதோடு பூஞ்சை தொற்று பரவாமல் இருக்க anti-fungal தெரபி ஆகிய மூன்று சிகிச்சைகளும் வழங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த மூதாட்டி அனுபவித்த வலி தற்போது குறையத் துவங்கி உள்ளதாகவும் அவரது பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.





