கொரொனாவால் மதுரையில் மூடப்பட்ட வங்கி..!
மதுரையில் வங்கி ஊழியருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது. மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திரா வங்கியில் பணியாற்றக்கூடிய ஊழியருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வங்கியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல் மீண்டும் வங்கி செயல்படும் என்று வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






