--- --:--:-- --

ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானது – ஐரோப்பிய மருந்து நிறுவனம்

7

க்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானது என ஐரோப்பிய மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த போது ஐரோப்பிய நாடுகளில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் பக்கவிளைவாக ஏற்பட்டதாக கூறப்பட்டது.

 

இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.

 

இந்த நிலையில் ஐரோப்பிய மருந்து நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தடுப்பூசி ஆக இரத்தம் உறைதல் என்பது மிகவும் அரிதாக உள்ளது என்றும் இது தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon