சுதந்திர தின வாழ்த்துக்கூறி வீடியோ வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான்..!
நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட சுதந்திர தினத்தில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கொரொனா அச்சுறுத்தல் உள்ள காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த வீடியோவில் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நமது முன்னோர்கள் செய்த தியாகத்தால் நாடு சுதந்திரம் அடைந்தது உள்ள காலத்தில் மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும், ஒற்றுமையுடன் செயல்பட்டு தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்வோம் அறிவை மதிப்போம் இசையை ரசிப்போம் ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.






