4 மாதங்களாக சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது..!
சென்னையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவியர் கல்விக்காக உதவி செய்து வருகிறார்.
அவரது ரசிகர்கள் நற்பணி இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்கின்றனர். வடசென்னை பகுதிகளில் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
சூர்யா நற்பணி இயக்கத்தினர் திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இலவசமாக தினமும் மதியம் மற்றும் இரவு உணவுகளை 4 மாதங்களுக்கு மேலாக வழங்கி உதவி செய்கின்றனர்.
சூர்யா ரசிகர்கள் சேவை வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கொரொனா பொது முடக்கத்தில் சிக்கியவர்களுக்கு உதவியாக இருக்கிறது என்கிறார் மூதாட்டி ஒருவர்.
இதுவரை சுமார் 30 ஆயிரம் நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியிருக்கும் ரசிகர்கள் மாதங்கள் கடந்த பிறகும்
எங்கேயும் சூர்யா பெயரை விளம்பரம் செய்யாமல் மகத்தான பணியை தொடர்கின்றனர்.






