பாறையின் அடியில் சிக்கி கொண்ட கரடியின் அலறல்..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பாறைக்கு அடியில் சிக்கிய கரடியை மீட்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தேயிலை தோட்டத்தில் உணவு தேடி வந்த பெண் கரடி ஒன்று நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அதன் முன்னங்கால் அங்கிருந்த பாறையின் அடியில் மாடி கொண்டது. கரடியின் அலறல் கேட்டு அந்த பகுதியினரும் தகவலறிந்து வந்த வனத்துறையினர் கரடியை மீட்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.






