சைடிஸ் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறு..போதையில் நண்பனை தாக்கிய 2 பேர்..!
செங்கல்பட்டில் மதுபோதையில் சைடிஷ் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை தாக்கி இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் நெமிலி ஊராட்சியை சேர்ந்த தினேஷ், ஜீவா, அஜித்குமார் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மத அருந்தியுள்ளனர்.
அப்பொழுது அஜித்குமார் சைடிஷை அதிகமாக சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் ஜீவா சக நண்பரான அஜித்தை கண் மூடி தனமாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் தாக்குதல் நடத்திய இரண்டு பேரை கைது செய்தனர்.





