மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மயில்..!
மதுரையில் மாடம்பரம் அருகே மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மக்களை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். ஊர்காவலன் கோவில் அருகே மயில் ஒன்று சுற்றித் திரிந்த நிலையில் அங்கு உள்ள மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.





