2 வது திருமணம் செய்து கொண்ட தந்தை..! தன்பாலின ஈர்ப்பாளரோடு திருமணம் செய்து கொண்ட தாய்..!
சுய விருப்பத்திற்காக தந்தையும் தாயும் வெவ்வேறு திருமணம் செய்துகொள்ள அவர்களது இரண்டு மகன்களும் பெற்ற தாயிடமே பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர். காவல்துறையிடம் புகார் அளித்துள்ள இரண்டு சிறுவர்களின் வாழ்க்கை காண்போரை கண்கலங்க செய்தது.
மூத்தவனுக்கு 15 வயது, இளையவனுக்கு ஆறு வயது. இந்த வயதில் சந்திக்கக்கூடாது பல்வேறு கொடுமைகளை இந்த சிறுவர்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சந்தித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் தங்கள் தாத்தா பாட்டியை அழைத்துக்கொண்டு காவல்நிலைய படியேறியுள்ளனர்.
அதற்குப் பின்னால் அத்தனை சோகம் நிறைந்துள்ளது.சிறுவர்களின் தந்தையான ராமலிங்கம் இந்துமதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி ரஞ்சிதாவுடன் இரண்டு குழந்தைகளை ஒரே வீட்டில் வசித்து உள்ளார்.
அப்போது இந்துமதியின் தோழியான தனலட்சுமி என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வர சிறுவர்களின் தாயிற்கு தன்பாலின ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனிடையே இராமலிங்கத்திற்க்கும் இந்து மதிக்கும் இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒரே இல்லத்தில் வசித்து வந்துள்ளனர். தன் பிள்ளைகளையும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தனலட்சுமியை அப்பா என அழைக்க வேண்டுமென்றும் தந்தை ராமலிங்கத்தை மாமா என அழைக்கவேண்டும் எனவும் பிள்ளைகளை வற்புறுத்தியுள்ளார்.
நின்றால் அடி, நடந்தால் அடி, மிளகாய் பொடி சாப்பாடு போன்ற கொடுமைகளை சிறுவன் கூறியுள்ளான். நரபலி கொடுத்துக் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் தாத்தா பாட்டியிடம் தஞ்சமடைந்த இரண்டு சிறுவர்களும் பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.






