நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜுவாலா கட்டாவுடன் திருமணம்..! இருவருக்கும் இரண்டாவது திருமணம்..!
திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.வெண்ணிலா கபடி குழுபடம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷாலும், பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இருவருக்கும் வருகிற 22-ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ள விஷ்ணுவிஷால் திருமண அழைப்பிதழையும் பகிர்ந்துள்ளார். விவாகரத்து பெற்ற விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டாவிற்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.






