உயிர் பிரிகிற போது கூட காட்பாடி காட்பாடி என்று தான் சொல்லிக் கொண்டிருப்பேன்..!
காட்பாடி காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் தன் உயிர் பிரியும் என்று அமைச்சர் துரைமுருகன் உருக்கமுடன் பேசியுள்ளார் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
அப்பொழுது பேசியவர் இது பாலம் நிலைத்திருக்கும் நூறு ஆண்டுகளுக்கு தன்னுடைய பெயரை சொல்லும் நிலவும் கூறினார். தன்னுடைய தொகுதியை கோயிலாக நினைத்து பணியாற்றி வருவதாக கூறிய அமைச்சர் உயிருள்ளவரை தான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் எனக் கூறினார் .
தன்னுடைய உயிர் பிரிகிற போது கூட காட்பாடி காட்பாடி என்று தான் சொல்லிக் கொண்டிருப்பேன் என தன் உயிர் போகும் என உருக்கத்துடன் கூறினார்.





