ஆசியாவின் வளர்ச்சி இயந்திரமாக தமிழ்நாடு மாறும் : முதலமைச்சர்
ஆசியாவின் வளர்ச்சி இயந்திரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு மைக்ரோசாப்ட் கூகுள், ஆப்பிள், அலுவலகங்களை நேரில் பார்வையிட்டார்.
நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அதன் தொடர்பான புகைப்படங்களை பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். ஆப்பிள், google, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்டது நல்ல அனுபவத்தை தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த நிறுவன அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனையை மேற்கொண்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசியாவின் வளர்ச்சி இயந்திரமாக தமிழ்நாட்டில் மாற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் முதலமைச்சருக்கு குறிப்பிட்டுள்ளார்.





