தாய், தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்த மகன்..!
காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் தாயை மனவளர்ச்சி குன்றிய மகன் அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள வையாபுர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன் – மீலா தம்பதியினர், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
தன்னை ஹரிகிருஷ்ணனும், இளைய மகன் கோபாலனும் வேலைக்கு சென்று விடுங்கள். மன வளர்ச்சி குன்றிய மூத்த மகன் தாயாருடன் வீட்டில் இருந்து வந்துள்ளான். தாயார் நீலா உறங்கிக் கொண்டிருந்த நிலையில் மன நலம் குன்றிய மகன் வீட்டில் இருந்து அம்மிக்கல்லை தூக்கி தாய் தலைமீது போட்டு சென்று விட்டான்.
இதில் தாய் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





