--- --:--:-- --

டிநகரில் ஆகாய நடை பாதையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

10

சென்னை தியாகராய நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேடை மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை தியாகராயநகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இடையே 600 மீட்டர் உள்ள நான்கு மீட்டர் அகலம் கொண்ட ஆகாய நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.

 

ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 28 கோடிய 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த ஆகாய நடை பாதை பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து விழா இன்று நடைபெறுகிறது.

 

ஆகாய நடை பாதையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட இந்த பாலம் நேற்று இரவு வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

 

Right Menu Icon