--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு!

2

இடைத்தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக விலைக்கு வாங்குவதாகக் கூறினார்.

 

 

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பிரச்சனைகளை பட்டியலிட்டார். 125 நாட்கள் வேலைத்திட்டத்தில் 10 நாட்கள் கூட வேலை தருவதில்லை என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார். தாராபுரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினரை பெட்டி கொடுத்து வாங்கிவிட்டார் முதலமைச்சர் விஜய் என்றும் கூறிய அவர், கட்சி தலைவர்களுக்கு சோஃபாவும், உறுப்பினர்களுக்கு பெட்டியும் கொடுத்து வாங்கிவிடுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.

 

சட்டமன்றத்தில் நாங்கள் கேள்வி கேட்டால் ஆளுங்கட்சியினர் பாட்டு பாடுகிறார்கள் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், இதற்காக நாங்கள் எதிர்பாட்டு பாட முடியுமா? அல்லது பாட்டு கிளாஸுக்குதான் போக முடியுமா? என்றும் முதலமைச்சர் டான்ஸும் ஃபைட்டும் மட்டும்தான் இன்னும் சட்டமன்றத்தில் செய்யவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
முன்னதாக, இந்த பிரச்சாரத்தின் போது சிறுவன் ஒருவனை வேனில் ஏற்றி பேச வைத்தார். அந்த சிறுவன் பேசும்போது, ‘ஓம் காளி.. பத்ர காளி…’ என்று குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தார். இந்த சம்பவத்தில் தான் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை அவமானப்படுத்தும் விதத்தில் குழந்தையை வைத்து பேசவைத்தும், தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்று கூறி அவர்மீது தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon