திருவண்ணாமலை மகா தீபம்: கட்டண தரிசன முறை ரத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறவுள்ள மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, தரிசனத்திற்கு அனுமதி பெற விரும்பும் பக்தர்கள் http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (நவ.18) முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்பவர்களில் இருந்து கணினி குலுக்கல் முறையில் தேர்வாகும் 3,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




