--- --:--:-- --

டிசம்பரில் மறியல் போராட்டம்: வீரபாண்டியன்

11

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, உச்ச நீதிமன்ற கிளையை தமிழகத்தில் தொடங்க வேண்டும். பிரதமர் மோடியை அருகில் வைத்துக்கொண்டு கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

 

பிரதமரை சந்திப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கான உரிய நிதியைப் பெற்று வர வேண்டும். தமிழகத்தில் விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டத்தின்போது அவர்கள் மீது போடப்பட்ட 90 ஆயிரம் வழக்குகள் தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளன. அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

 

 

திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டும், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளை அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தியும், ‘மாற்றம் அவசியம்’ என்ற முழக்கத்தோடு நாடு முழுவதும் வருகிற டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

 

 

பி.சி.ஆர் சட்டம் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மக்களின் நலனை பாதுகாப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பொதுவெளியில், பொதுவாழ்வில் உள்ள சு.வெங்கடேசன் பற்றி விமர்சனம் செய்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.திருச்சியில் சாலையோர வியாபாரிகளின் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் விதத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.

 

 

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது, விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஆகியவை குறித்து தமிழக முதல்வர் வாய் திறந்து பேச வேண்டும். தி.மு.க-விடமிருந்து பெற்ற நிதியை தி.மு.க-வினர் தான் செலவு செய்தார்கள். நாங்கள் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து மட்டுமே நிதியைப் பெறுகிறோம். பெரு முதலாளிகளிடமிருந்து நாங்கள் நிதி வாங்குவதில்லை என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon