கோவிலை அகற்றிய அதிகாரிகள் – தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்
சென்னை அயப்பாக்கம் வி.ஜி.என் குடியிருப்பில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி, அதிகாரிகள் ஆலயத்தை இடிக்க வந்தனர்.
அப்போது பொதுமக்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து கோவிலை இடிக்கக் கூடாது என்று தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், பலர் எங்களுக்கு கோவில் வேண்டும் இடிக்கக் கூடாது என்று கத்தி கூச்சலிட்டனர். இந்நிலையில், பொது மக்களை போலீசார் வெளியேற்றிய நிலையில் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வ சுந்தரி தலைமையில் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கோவிலை இடித்தனர். ஆவடி காவல் உதவி ஆணையர் சம்பத் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கோவில் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





