--- --:--:-- --

சிறுவன் மீது தாக்குதல்: தனியார் பள்ளி ஆசிரியை, உதவியாளர் பணிநீக்கம்

8

திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுவனின் கைகளைக் கட்டிவைத்துத் தாக்கிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் உதவியாளர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சிறுவன் ஒருவன் அழுதுகொண்டிருக்கும் காட்சிகளும், ஆசிரியை கண்டிக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தத் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் பள்ளி ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் உதவியாளர் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon