--- --:--:-- --

ரேஷன் கடை பணிகளுக்குத் தகுதி, நிபந்தனை..?

7

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களைத் தற்காலிகமாக மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நிரப்ப கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. நிரந்தரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் வரை, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

 

தமிழகத்தில் 26,618 முழுநேரக் கடைகள், 10,710 பகுதிநேரக் கடைகள் என மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 2.28 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, 1,714 விற்பனையாளர்கள், 176 கட்டுநர்கள் என மொத்தம் 1,890 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் 26,618 முழுநேரக் கடைகள், 10,710 பகுதிநேரக் கடைகள் என மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 2.28 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, 1,714 விற்பனையாளர்கள், 176 கட்டுநர்கள் என மொத்தம் 1,890 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 

 

இந்தப் பணிகளுக்கு விற்பனையாளர் பொறுப்புக்கு பிளஸ் 2, கட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவின் செயல்பாடு, உறுப்பினர்களின் கல்வித்தகுதி, வங்கிக் கடன் திருப்பிச் செலுத்தும் விவரம் ஆகியவையும் பரிசீலிக்கப்படும்.

 

 

அரசுப் பணி அல்லது கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்கெனவே பணிபுரியாதவராகவும், குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் அல்லது ஊழியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் அனுமதி கிடையாது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு தகுதியானவர்களைத் தேர்வு செய்து, ஆவணங்கள் மற்றும் பணித்திறனைச் சரிபார்த்து பயிற்சி அளிக்கும்.

 

 

இவர்களுக்கு தினசரி ரூ.400 ஊதியம் வழங்கப்படும். மாத ஊதியம் விற்பனையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.7,500, கட்டுநர்களுக்கு ரூ.6,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ-பிஓஎஸ் கருவி, கைரேகை மற்றும் கருவிழி சரிபார்ப்பு, பொருள் இருப்பு பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், ரூ.10,000 பாதுகாப்புத் தொகை மற்றும் ரூ.1 லட்சத்துக்கான நேர்மைப் பிணை காப்பீடு செலுத்த வேண்டும். இந்தப் பணி தற்காலிகமானது என்பதுடன், நிரந்தரப் பணி கோரமாட்டோம் என்ற உறுதிமொழியும் அளிக்க வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon