--- --:--:-- --

தன்னை அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் எச்சரிக்கை

4

ட்டப்பேரவையில் தன்னை அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

 

பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது கடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முதல்வர் செய்த திட்டங்கள் குறித்து அரைமணி நேரத்திற்கும் மேலாக புகழ்ந்து பேசினார்.

 

இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகழ்ச்சிக்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon