--- --:--:-- --

லஞ்சம் கொடுக்க பணமில்லை – பேருந்து நிலையத்தில் யாசகம் கேட்டு விவசாயி நூதனப் போராட்டம்

9

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பூர்வீக சொத்தின் கூட்டுப் பட்டாவில் தனது பெயரைச் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாகக் கூறி விவசாயி ஒருவர் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம் நொணைவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி அப்துல் சலீம் ஷேக், கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். “லஞ்சம் கொடுக்க பணமில்லை” எனக் கூறி, லஞ்சம் கொடுப்பதற்காக பணம் திரட்டுவதாகக் கூறி அவர் மேற்கொண்ட இந்த நூதனப் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon