--- --:--:-- --

தென்காசியில் ஆணவக் கொலை முயற்சி: காதல் தம்பதியை வெட்டிய பெண்ணின் தந்தை கைது

10

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23) மற்றும் சுஷ்மிதா (21) ஆகிய காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெண் வீட்டின் விருப்பமின்றி நடந்த இந்தத் திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை முருகன், தம்பதியின் வீட்டுக்குள் புகுந்து ஆகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

 

 

இதைத் தடுக்க வந்த தனது சொந்த மகள் சுஷ்மிதாவுக்கும் வெட்டு விழுந்ததில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆகாஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பி ஓடிய தந்தை முருகனைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon