--- --:--:-- --

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

01

த்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தன. இது தொடர்பாக, டெல்லியில் உள்ள தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

அப்போது, நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.இதை ஏற்றுக்கொள்ளாத வங்கி ஊழியர்கள் சங்கங்கள், தங்களுக்கு சாதகமான முடிவு அல்லது உறுதியான காலக்கெடு வழங்கப்படாத வரை போராட்டத்தைக் கைவிட முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. வேலைநிறுத்தம் காரணமாக தங்களின் கிளைகளின் இயல்புத் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்றும், இருப்பினும் வழக்கமான சேவைகளை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி பங்குச்சந்தைகளுக்குத் தகவல் அளித்துள்ளது.

 

 

இன்று போராட்டம் நடைபெறும் நிலையில், கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon