புதிய தலைமைச் செயலகத்துக்கான முன்மொழிவு தவறானது – மு.வீரபாண்டியன்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சிபிஐ மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவு தவறானது என்றும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோரச் சூழலியல் மற்றும் பொதுமக்களின் கடற்கரை அணுகல் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, பட்டினப்பாக்கத்தைத் தவிர்த்து புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடங்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




