--- --:--:-- --

ஊராட்சி மன்ற செயலர் தன்னை அவமரியாதை செய்ததாக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

6.1

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருந்து வருபவர் நாகவள்ளி. இவர் இன்று ஊராட்சி ஒன்றிய பணிகளில், மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்கண்ணு தன்னைத் தொடர்ந்து அவமரியாதை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

மேலும், தான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் இதுபோல் அவமரியாதை செய்து வருவதாக குற்றச்சாட்டு கூறி மறவமங்கலம் ஊராட்சி செயலர் முத்துக்கண்ணு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon