ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டாரத்தில் 2020- 2021 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்ற மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தரிசாக உள்ள நிலங்களில் முளைத்துள்ள சீமைகருவேல் மரங்கள், செடி, கொடிகள,முட்புதர்களை, அகற்றி சீரமைத்து முறையாக விவசாய விளை நிலங்களாக மாற்ற அரசு ரூபாய் பத்தாயிரம் மானியமாக வழங்க உள்ளது.
இந்த திட்டத்தின் படி மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாகவழங்கப்படும். இந்த திட்டம் திருவாடானை வட்டாரத்தில் மொத்தம் 70 ஏக்கருக்கு பரப்பளவில் செயல்படுத்த உள்ளது.
சீரமைக்கப்பட்ட விவசாய நிலத்தில் சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிர் விதைகள் விதைக்கும் போது தேவையான உயிர் உரங்கள் நுண்ணூட்ட உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை 50 சதவீத மானியத்தில் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
மேலும் தரிசு நிலத்தை விளை நிலமாக்கி திட்டத்தில் பயன் அடைய விரும்பும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் 5 ஆண்டுகள் தரிசு என வழங்கப்பட்ட சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் திருவாடனை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதி முன் பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார். விவசாயிகள் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.