என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பார்த்துக்கொண்டிருந்தார் – இ.பி.எஸ்ஸை பாராட்டிய சபாநாயகர்
த.வெ.க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். மிகவும் அமைதி காத்தீர்கள். இதுதான் உங்கள் தலைவர் உங்களுக்கு கற்றுதந்திருக்கிற நல்ல பண்பு என்று கருதி பாராட்டுகிறேன் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அ.தி.மு.க-வை நோக்கி உங்களையும் பாராட்டுகிறேன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உன்னிப்பாக என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பார்த்துக் கொண்டிருந்தார் அதற்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




