--- --:--:-- --

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு..!

02

ந்து தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.கடந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

 

 

அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. – எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. – சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையமும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் தரப்பில், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு இன்று காலை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதித்த தடையை நீட்டிப்பதில் எந்த நியாயமும் இல்லை, என தெரிவிக்கப்பட்டது.

 

 

தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இல்லாத இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், பெருந்துறை தொகுதி தேர்தல் வழக்கை நிராகரித்த உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தடையை நீக்க வேண்டும் என கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்க விதித்த தடையை நீக்க முடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. அதுவரை இடைத்தேர்தல் அறிவிக்க விதித்த தடையை நீட்டித்த நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon