கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரை இழக்கும் ராணுவ வீரர்களை வீரமரணம் அடைந்தவர்களாக கருதி அவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கலாம் என்று பரிந்துரைக்கு உள்துறை அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரொனா தடுப்பில் முன்கள பணியாளர்களாக நின்று இந்த வகையில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குடும்பங்களுக்கு மக்கள் நேரடியாக நன்கொடை கொடுக்கும் விதத்தில் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியிடப்படும் எனவும் கூறப் படுகிறது.பாரத் கீ பீர் என்ற பெயரில் உள்ள ராணுவ வீரர்கள் உதவிய நிதியில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மக்கள் அளித்த நன்கொடையை 250 கோடி ரூபாய் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.