அறிவார்ந்த ஏலியன்கள் வாழும் வேறு ஒரு கிரகம் இருக்க வாய்ப்பு உள்ளது!
பூமியைப் போன்ற உயிர்கள் உள்ள வேறு ஒரு கிரகம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் மனிதனின் முயற்சிக்கு இதுவரை விடை கிடைக்காவிட்டாலும் அந்த அண்டத்தில் நம்மைப்போன்ற அறிவார்ந்த உயிர்கள் என கருதப்படும் ஏலியன்கள் சுமார் 36 கிரகங்களில் இருக்கலாம் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
அதே நேரம் அவர்கள் எந்த கிரகங்களில் வாழ்கிறார்கள், இவர்களுடன் நமக்கு தொடர்பு கொள்ள இயலுமா என்ற பல கேள்விகள் விடை தெரியாமல் உள்ளன. இந்த நிலையில் நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலர் அண்ட பரிமாணக் கொள்கையின் அடிப்படையில் இந்த 36 ஏலியன் சமுதாயங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் என்ற வானியல் இதழில் இவர்கள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் விண்ணில் நட்சத்திரங்கள் உருவாகுதல் அவற்றின் கனிம உலக அமைப்பு ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ததில் இதர பால் வீதிகளில் பூமியைப் போன்ற கோள்கள் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.






