--- --:--:-- --

பேரிடர் மேலாண்மை புதிய மையம்!

10

தற்போது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமைக்கு கிண்டியில் நிரந்தரமான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வளாகம் உருவாக்கப்பட உள்ளது. இந்த வளாகம் ரூ.83 கோடி மதிப்பீட்டில் 11 தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, கிண்டி வட்டம் வெங்கடாபுரம் பகுதியில் 9.40 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்படுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

நவீன பயிற்சி அரங்குகள், வகுப்பறைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைய உள்ள இந்த மையத்தில் வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படையினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

 

மேலும், பேரிடர் காலங்களில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த புதிய வளாகம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon