1000 கோடி ரூபாய் வசூலை கடந்த ராமாயணா!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்திருந்தனர். யஷ், ராவணனாக மிரட்டி இருந்தார். இப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகியுள்ள நிலையில், முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது.
இதற்கிடையே, இத்திரைப்படம் வெளியாகி வெறும் 6 நாட்களில் தென்னிந்திய மொழிகளின் டப்பிங் பதிப்புகளில் இருந்து மட்டும் நிகர வசூலாக (Net Collection) ரூ.100 கோடியைக் கடந்து மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் இந்தி திரைப்படம் என்ற பெருமையை ‘ராமாயணா’ பெற்றுள்ளதாக சாஃக்னில்க் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது, உலகம் முழுவதும் 1033 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 564.60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதேநேரம், வெளிநாடுகளில் 358.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த 11வது திரைப்படமாக ‘ராமாயணா: பாகம் 1’ உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ‘ராமாயணா’ திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31, 2026-க்குள் (குறிப்பாகப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி) ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





