மதுரை, தனிஷ்க் நகைக் கடையில் நேற்று 15 கிலோவுக்கு மேல் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், முன்னதாக கடந்த 5ம் தேதி அதிகாலையே முகமூடி அணிந்தபடி வந்து நகைக்கடையில் கொள்ளையன் நோட்டம் பார்த்தது தெரிய வந்துள்ளது. கொள்ளையனை தேடி தனிப்படை போலீசார் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.