ஒவ்வொரு பூத்திலும் புதிய வாக்காளர்களைக் கண்டறிய வேண்டும் – தவெக நிர்வாகிகளுக்கு என்.ஆனந்த் உத்தரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து கட்சியில் இணைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு பூத்திலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களின் விவரங்களை முறையாகச் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




