--- --:--:-- --

சீனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள எங்களுடன் இணையுங்கள்..!

9

சீனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்காவிற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைமை தூதர் ஜோசப் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் அமெரிக்காவை அழைத்துள்ளார். சீனாவின் செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதுடன் இருதரப்பு நலன்களை தற்காத்துக்கொள்ள இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆசியாவில் சீனாவை தவிர பிற நாடுகளுடன் நல்லுறவை அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் காணொளி மூலமாக நடத்தப்பட்ட கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon