--- --:--:-- --

அம்பேத்கர் உயர்கல்வி உதவித்தொகை திட்டம்

12

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 366 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. இவர்களில் இதுவரை 165 மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள நிலையில், மீதமுள்ள 201 மாணவர்கள் மார்ச் 2027-க்குள் பல்கலைக்கழகங்களில் சேர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுவரை 84 மாணவர்களுக்கு ரூ.30.24 கோடி கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 56 மாணவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன. 25 மாணவர்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடப்பாண்டில் தாட்கோ மூலம் 116 மாணவர்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

 

 

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விடுவிப்பதில் எவ்வித தாமதமும் இல்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சமூக நீதித்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon