--- --:--:-- --

உடன்பாட்டிற்கு எதிராக சீனா செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

LADAKH

Army vehicles stop at a base camp in Leh in the cold desert region of Ladakh, 434 kms from Srinagar. The peaks in Kargil area of Ladakh witnessed a war between Indian soldiers and the soldiers of the neighbouring Pakistan in the summer of 1999. Express Photo By Shuaib Masoodi, 05.07.2014.

இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு எதிராக சீனா செயல்பட்டு இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

 

எல்லையில் இரு நாட்டு வீரர்கள் இடையிலான மோதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத்துறை இந்தியாவின் பகுதிக்குட்பட்ட இடத்திலேயே எல்லை நிர்வாகம் தொடர்பான செயல்களில் இந்தியா ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது.

 

சீனாவும், எல்லை நிர்வாகப் பணிகளை அவர்கள் பகுதியிலேயே மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா அமைதியையே விரும்புவதாகவும் அதே நேரத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயல்களை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

எல்லையில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உடன்பாட்டை சீனா மதித்திருந்தால் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்றும் இந்திய வெளியுறவு துறை கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon