--- --:--:-- --

ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஆழ்ந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ள சோனியா காந்தி!

5.2

லடாக் எல்லைப் பகுதியில் சீன படையினருடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து ஆழ்ந்த வேதனை கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பையும், நிலப்பரப்பு ஒருங்கிணைப்பையும் பாதுகாப்பதில் ஒன்றாக நிற்பதாக தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்த வீரர்களின் வீரத்திற்கு புகழாரம் சூட்டியுள்ள சோனியாகாந்தி வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு படைகளுக்கு இடையே நடந்த மோதல் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் இரண்டு நாடுகளும் அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாடுகளும் நடவடிக்கை எடுப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon