--- --:--:-- --

பெற்ற தாயை உயிரோடு குழிக்குள் தள்ளிய மகன்..! 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட தாய்!

7

மகனால் உயிரோடு புதைக்கப்பட்ட தாய் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. வடக்கு சீனாவின் கிராமப் பகுதிகளில் கடந்த 2ஆம் தேதி கணவன் தனது தாயை கை வண்டி ஒன்றில் தள்ளிச் செல்லும் காட்சியை கண்ட மனைவி மூன்று நாட்களுக்குப் பிறகும் தனது மாமியார் வீடு திரும்பாததால் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த சவக் குழி ஒன்றில் அந்த நபர் தாயை தள்ளி மேலே மண்ணை போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மகனின் செயலால் அதிர்ச்சி அடைந்த தாய் முதலில் மயங்கி விட்டாலும் பின்னர் விழித்து மூன்று நாட்களாக மீட்பு குரல் கொடுத்து வந்துள்ளார்.

 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 79 தாயை பராமரிக்க முடியவில்லை என்பதால் உயிரோடு குழிக்குள் தள்ளினேன் என்று கைது செய்யப்பட்ட 58 வயது மகன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon