ஒடிசாவில் ஒரு வீட்டில் இரு தலைகளை கொண்ட அரிய பாம்பு!
இரு தலைகளைக் கொண்ட அரிய பாம்பு ஒடிசாவில் ஒரு வீட்டில் இருந்து பிடிக்கப்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. ஒடிசா மாநிலம் கியுஞ்சர் மாவட்டத்தில் வனப்பகுதி அருகே ஒரு வீட்டில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.
ஓனாய் பாம்பு என்ற வகையை சேர்ந்த விஷத்தன்மையற்ற இந்த பாம்பிற்கு இரு தலைகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு உடலில் இரு தலைகளும் தனித்தனியாக இயங்குகின்றன. இந்த பாம்பு வனபகுதியில் பின்னர் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தெரிவித்துள்ளார்.






