டிராவல்ஸ் உரிமையாளர் கொலை! நண்பரின் மனைவியை தனது இச்சைப்படி நடக்க சொன்னதால் கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சேலத்தில் டிராவல்ஸ் அதிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரின் தொழில் கூட்டாளியே அவரை கொலை செய்தது ஏன்? பங்குதாரராக நெருங்கிய நண்பர் என்ற நிலையில் இருந்த பிரபாகரன் தனது நண்பரான அபிஷேக்கை கொலை செய்து சிக்கியுள்ளார். நண்பரே நண்பரை கொலை செய்ய காரணம் என்ன?

 

சேலம் அன்னதானப்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் 29 வயதான அபிஷேக். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கவினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த அபிஷேக் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று விட்டார். தனது பாட்டியுடன் வசித்து வரும் இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

 

அபிஷேக்கின் நண்பரான சேலம் தாதகாப்பட்டி சேர்ந்த 28 வயதான பிரபாகரன் தொழில் பங்குதாரராக இருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரை அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அபிஷேக் இரவு ஒரு மணிவரை வாட்ஸ்அப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

 

தனக்கு அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தகவலை பகிர்ந்துள்ளார். தனக்கு உதவிய நண்பர்கள் சிலருக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸில் போட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் சிலரிடம் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அபிஷேக் அடிக்கடி பிரபாகரனின் மனைவியிடம் பேசி வந்தது தெரியவந்தது.

 

இதனையடுத்து பிரபாகரனையும் அவரது மனைவியையும் போலீசார் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விவாகரத்து பெற்ற பின்னர் அபிஷேக் திருமணம் செய்யாமல் பல பெண்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரபாகரன் மனைவியையும் அவர் வளைக்க முயற்சி செய்துள்ளார்.

அதற்காக அடிக்கடி அவரை தொடர்புகொண்டு இனிமையாக பேசி பேசி கரைக்க முயன்றுள்ளார். இந்த பிரச்சனையை பிரபாகரனிடம் அவரது மனைவி சொல்லி கதறி அழ பிரபாகரன் ஆத்திரமடைந்தார். தனது நண்பரான 23 வயது அருள் குமாருடன் சேர்ந்து செவ்வாய் இரவு தூங்கிக் கொண்டிருந்த அபிஷேக்கை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

 

இதையடுத்து பிரபாகரன் மற்றும் அருண்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். நண்பன் என்றும் பாராமல் அவரது மனைவியை காதல் வலையில் வீழ்த்த முயன்ற டிராவல்ஸ் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply